Home » டெல்லி குண்டுவெடிப்பு: வெறும் தொடக்கமா?
தீவிரவாதம்

டெல்லி குண்டுவெடிப்பு: வெறும் தொடக்கமா?

இந்தியாவின் பாரம்பரியச் சின்னமான டெல்லி செங்கோட்டைக்கு அருகே கார் குண்டு வெடித்துப் பத்து நாள்களுக்கும் மேலாகிவிட்டது. ஆனால், தாக்குதலுக்குக் காரணமானவர்கள் யாரென்பது இன்னமும் உறுதியாகக் கண்டுபிடிக்கப்படவில்லை, அல்லது கண்டுபிடிப்புகள் வெளிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் டெல்லியிலுள்ள பள்ளிகள், நீதிமன்றங்களுக்குத் தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளன.

கடந்த பத்தாம் தேதியன்று செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகில் i20 கார் ஒன்று வெடித்துச் சிதறியது. வாகன நெரிசல் காரணமாக மெதுவாக நகர்ந்துகொண்டிருந்த கார் திடீரென வெடித்திருக்கிறது. இதில் பதிமூன்று பேர் உயிரிழந்தனர். முப்பது பேர் காயமடைந்தனர். காரின் எரிவாயு கசிந்ததால் ஏற்பட்ட விபத்து இது என்று முதலில் நினைத்தனர். ஆனால், விசாரணையில் இது ஒரு தீவிரவாதத் தாக்குதல் என்பது தெரியவந்தது.

அந்தக் காரை ஓட்டிவந்தவர், ஃபரீதாபாத்தின் அல்-ஃபலா பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றிவந்த மருத்துவர் உமர்-உன்-நபி எனக் கண்டறிந்தனர். தடயவியல் துறையின் டிஎன்ஏ ஆய்வுகள் இதனை உறுதிசெய்தன. ஆரம்பக்கட்டப் புலனாய்வில், ஒரு தற்கொலைத் தாக்குதலுக்கான வழக்கமான பண்புகள் இதில் இல்லாதது அதிகாரிகளைக் குழப்பியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!