வெளியே கிளம்பும்போது உங்கள் தலையில் சிவப்பு நிறத் தொப்பி இருக்கிறதா? அப்படியானால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருங்கள். திடீரென்று வானத்திலிருந்து ஒரு காகம் மின்னல் வேகத்தில் வந்து உங்கள் தொப்பியைப் பறித்துச் சென்றால் ஆச்சரியப்படாதீர்கள்!
இது ஏதோ தற்செயலாக நடக்கும் விஷயம் அல்ல; ஒரு மனிதன் திட்டமிட்டு உருவாக்கிய ஒரு ‘பறவைப் படை’ நடத்தும் தாக்குதல். 2026ஆம் ஆண்டின் முதல் வினோதமான உயிரியல் போர் (Biological War) இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படி ஒரு போரை நடத்த காகங்கள் எப்படிச் சாத்தியம்? அதற்கு அந்தக் காகங்களின் அபார அறிவுதான் காரணம். பொதுவாகக் காகங்களை நாம் ஒரு சாதாரணப் பறவையாகப் பார்க்கிறோம். ஆனால், அறிவியல் உலகம் காகங்களை ‘பறக்கும் குரங்குகள்’ (Feathered Primates) என்று அழைக்கிறது. அந்த அளவுக்கு அபாரமான அறிவுத்திறன் காகங்களிடம் பொதிந்துள்ளது.















Add Comment