பச்சையும் இல்லாமல், நீலமும் இல்லாமல், இரண்டும் கலந்த நீலப் பச்சை வண்ணத்தை ஆங்கிலத்தில் ‘டர்க்காய்ஸ்’ (turquoise) என்று அழைப்பார்கள். இது மயில் கழுத்து நிறத்தைவிட லேசான நீலம். சுத்தமான, மாசடையாத டர்க்காய்ஸ் நிறக் கடல் நீருடன் வெள்ளை மணல் சேர்ந்து அற்புதமாகக் காட்சி தரும் கடல்கள் இவ்வுலகில் சொற்பமே.
அப்படியோர் அழகிய கடற்பரப்பு சூழ்ந்த ஒரு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வண்ணமயமான கட்டடங்கள்; வானைத் தொடும் தேவாலயங்கள்; அகலமான கடலோரச் சாலையில் இன்றும் ஐம்பதுகளைப் போலக் காட்சியளிக்கும் வின்டேஜ் வாகனங்கள் எனச் சுற்றுலாவின் அழகுக்கு நூற்றுக்கு இருநூறு மதிப்பெண் வாங்கும் நாடு கியூபா.
இத்தனையும் இருந்தும் வானம் பார்த்த பூமி போல இன்று வெறிச்சோடி, சுற்றுலாப் பயணிகளை எதிர்பார்த்து நிற்கிறது.
















Add Comment