ஹெரிடேஜ் சுற்றுலா என்பது இன்று எல்லா நகரங்களிலும் எல்லா மாநிலங்களிலும் எப்போதும் நடப்பதுதான். குறிப்பிட்ட ஓர் இடத்தை, ஒரு குழுவாகச் சென்று சுற்றிப் பார்த்து, அதன் சரித்திர முக்கியத்துவங்களைக் கண்டும் கேட்டும் அறிந்துகொண்டு திரும்புவது இதன் பலன். பெங்களூருவில் இப்படியொரு ஹெரிடேஜ் சுற்றுலாவில் பங்குகொள்ளும் வாய்ப்பு தற்செயலாக நேர்ந்தது.
பெங்களூரு ப்ரயானா என்றொரு அமைப்பு உள்ளது. பெங்களூரு நகரின் சரித்திரப் பெருமைகளை அறிய விரும்புவோர் மட்டும் இணைந்து இயங்கும் அமைப்பு இது. ஒரு வாட்சப் குழு அமைத்து, அதன் உறுப்பினர்களை இவர்கள் வாரம் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்துக்குச் சுற்றுலாவாக அழைத்துச் சென்று விளக்கம் தந்து அனுப்பி வைப்பார்கள். மற்ற குழுக்களுக்கும் இதற்கும் உள்ள வேறுபாடு, இவர்கள் அழைத்துச் செல்லும் இடங்கள் எளிதில் மற்றவர்களுக்குக் காணக் கிடைக்காதவை.
இந்த பெங்களூரு ப்ரயானாவின் ஒரு ஹெரிடேஜ் வாக் நெடும்பயணத் திட்டத்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு சமீபத்தில் நமக்குக் கிடைத்தது. மதராஸ் சேப்பர்ஸ் (Madras Sappers) எனும் இந்தியத் தரைப்படையின் பொறியாளர் படைப்பிரிவுக் குழுவின் தலைமைச் செயலகத்துக்கு வீரநடை போடத் தொடங்கினோம். குழுவை வழி நடத்த ராணுவ வரலாற்றாசிரியர் வருண் கன்னா வந்திருந்தார். வெறுமனே நடப்பதா பெரிது? பாதம் பதியும் இடங்களில் எல்லாம் கொட்டிக்கிடக்கும் சரித்திர உதிரிப் பூக்களைச் சேர்த்துக் கோத்துத் தொடுத்துக் காட்ட ஒருவர் அவசியம் அல்லவா? வருண் கன்னா அப்பணியை அழகாகச் செய்தார். அவரோடு பெங்களூரு ப்ரயானாவின் ரக்ஷா நாகராஜும் நமக்கு விளக்கம் தர இணைந்துகொண்டார்.
















Add Comment