Home » அமெரிக்கர்கள் வெறுக்கும் ICE
உலகம்

அமெரிக்கர்கள் வெறுக்கும் ICE

அமெரிக்கர்கள் தற்போது மிகவும் வெறுக்கும் ஒரு பெயர் இருக்கிறது. அது என்ன தெரியுமா?  நீங்கள் நினைக்கும் அந்தப் பெயர் இல்லை.

பெரும்பான்மையான அமெரிக்கர்கள் வெறுக்கும் அந்தப் பெயர் ‘ICE’. Immigration and Customs Enforcement என்பதின் சுருக்கம். அதாவது, குடியேற்றம் மற்றும் சுங்கவரி அமலாக்கத் துறை. நாட்டில் சட்டவிரோதமாகக் குடியேறியிருக்கும் அந்நியர்களை வெளியேற்றும் வேலையைச் செய்யும் அமைப்பு இது.

ஒரு கருத்துக்கணிப்பின்படி, அறுபது விழுக்காடு அமெரிக்கர்கள் ICE அமைப்பு தற்போது மேற்கொண்டு வரும் குடியேற்ற ஒடுக்குமுறைகள் ஏற்புடையதாக இல்லை என்கின்றனர். இவ்வமைப்புக்கு எதிரான மக்கள் போராட்டங்கள் அளவிலும் எண்ணிக்கையிலும் அதிகரித்தபடி இருக்கின்றன.

ஆண்டுக்குப் பத்து லட்சம் சட்டவிரோதக் குடியேறிகள் வெளியேற்றப்பட வேண்டும் என்பது டிரம்ப் அரசின் குறிக்கோள். கடந்த ஜனவரியில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, அதற்கான நடவடிக்கைகளை அதிரடியாகச் செயல்படுத்தத் தொடங்கியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!