சிரியாவின் அதிபராக அஹ்மத் அல்-ஷரா பொறுப்பேற்றபோது, அயல்நாடுகளுடன் எந்தவிதச் சிக்கலுமின்றி நட்புறவு பேணப்படும் எனத் தெரிவித்திருந்தார். 2024இல் அவர் ஆட்சிக்கு வந்த பிறகு ரஷ்யா, அமெரிக்கா என இரு நாடுகளுக்கும் பயணித்து, தன் அணிசேராக் கொள்கையை உலகுக்குத் தெரிவித்தார்.
அவரது முயற்சிகளால் ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, சவுதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் சிரியாவில் முதலீடுகளைச் செய்ய முன்வந்தன. விமானச் சேவை, எரிவாயு, துறைமுகம் போன்ற துறைகளில் கணிசமான முதலீடுகளைப் பெற்றது சிரியா. உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. அகதிகளாக வெளிநாட்டுக்குச் சென்ற பல லட்சம் சிரியர்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பத் தொடங்கினர்.
நிலைமை முற்றிலும் மாறிவிடவில்லை எனினும், முன்னேற்றத்துக்கான நல்ல தொடக்கமாகவே இதுவரையிலான அல் ஷராவின் ஆட்சி இருக்கிறது.















Add Comment