இந்தக் காலகட்டம் இந்திய மக்களிடையே கிளர்ச்சி, அடக்குமுறை, சீர்திருத்தம் என்ற மூன்று முக்கிய மாற்றங்களை ஏற்படுத்திய, இந்தியச் சுதந்தரப் போராட்ட வரலாற்றின் முதல் விதையான சிப்பாய்ப் புரட்சி நிகழ்ந்த தசாப்தம்.
1857ஆம் ஆண்டில் உருவான சிப்பாய்க் கலகம்தான் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான முதல் பெரிய எழுச்சி. புதிய துப்பாக்கித் தோட்டாக்களில் பசு மற்றும் பன்றியின் கொழுப்பு தடவப்பட்டிருப்பதாக வதந்தி பரவியது. இது இந்தியச் சிப்பாய்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தி, கிளர்ச்சியை உருவாக்கியது. ஆயினும் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியின் பொருளாதாரச் சுரண்டல்களும், ஆக்கிரமிப்பு அரசியலுமே இந்தக் கிளர்ச்சிக்கான அடிப்படை காரணம்.















I learned something new today. I didn’t know how and when British took over directly from East India company.