ஆன் டஸ்ட்ஹில் சிம்ஸ்
ஜில் பைடனுக்கு முன்பாக இதுவரை வந்த முதல் பெண்மணிகளில் மிகவும் மூத்தவர் என்ற தகுதியைக் கொண்டவர். மிகக் குறைந்த நாள்களே அந்த அதிகாரத்தைப் பெற்றவரும் கூட. கணவரும் அதிபர், பின்னாளில் பேரனும் அதிபர் என்ற தகுதியைக் கொண்டவர். அவர்தான் ஆன் டஸ்ட்ஹில் சிம்ஸ் ஹாரிசன் (Ann Tutthill Symmes).
நியூஜெர்சியில் 1775ஆம் ஆண்டு ஜான் செவ்ஸ் என்ற உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு மகளாகப் பிறந்தார். பிறந்த ஒரு வயதுக்குள்ளாக அன்னை இறந்துவிட்டார். தந்தை, அன்போடு மகளை வளர்த்தார்.
அமெரிக்காவில் அப்போது நடந்த புரட்சிப் போரில் படைத் தளபதியாகப் பங்கு பெறச் சென்றார் ஜான். மகளை மனைவியின் பெற்றோர் வீட்டில் விட்டுவிட ஒரு கூடையில் வைத்து எடுத்துச் சென்றார். போர்வீரர்களின் கண்ணில் படாதவாறு எடுத்துச் செல்ல இரண்டு கூடைகளை எடுத்துச் சென்றாராம். ஒன்றில் மகள், இன்னொன்றில் டர்னிப் கிழங்குகள். கூடையைத் திறந்து காட்டச் சொன்னால், டர்னிப் கிழங்குகளைக் காட்டி ஏமாற்றி அழைத்துச் சென்றாராம்.















Add Comment