லடிஷியா கிரிஸ்டியன்
அமெரிக்காவின் பத்தாவது முதல் பெண்மணி. பக்கவாதத்தால் உடலும் மனமும் பாதிக்கப்பட்டாலும் தன் கடமையில் குறையேதும் வைக்காத அன்னை, மனைவி. ஐந்து வருடங்கள் காதலித்து மணமுடித்த கணவருக்காக வாழ்ந்து மறைந்த பெண்.
பெண்களுக்கென எந்த உரிமைகளும் இல்லாத 1790ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிறந்தார் லடிஷியா கிரிஸ்டியன் (Letitia Christian). வர்ஜினியாவில் மிகப் பெரிய தோட்டமும் துரவுகளும் கொண்ட செல்வந்தரான மேரி என்ற அன்னைக்கும், ராபர்ட் என்ற தந்தைக்கும் (Mary née Browne and Robert Christian) ஏழாவது மகளாகப் பிறந்தார். முறையான கல்வி இல்லை, ஆனால் தந்தையின் தோட்டங்களை மேற்பார்வையிடும் நிர்வாகத் திறனைப் பெற்றிருந்தார்.
அடிப்படை மருத்துவம், நெசவு, நிதி நிர்வாகம், வரவு செலவுக் கணக்கீடு எனப் பலவற்றையும் அவரது அன்னையிடம் இருந்து கற்றுக்கொண்டார். ஆன்மிகத்தில் நிறைய ஆர்வம் கொண்டிருந்தார். ஆளுநரின் மனைவியாக, துணை அதிபரின் மனைவியாக, அமெரிக்காவின் முதல் பெண்மணியாக வாழ்ந்தபோதும், சிறந்த அன்னையாகவும் மாமியாராகவும் அறியப்படுகிறார்.















Add Comment