Home » நாம் செய்ய வேண்டியது என்ன?
நம் குரல்

நாம் செய்ய வேண்டியது என்ன?

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதி எந்த நேரமும் அறிவிக்கப்படலாம். நான்கு முனைப் போட்டியாக இருந்தாலும் திமுகவா அதிமுகவா என்ற கேள்விக்குத்தான் இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் விடை சொல்லப்போகின்றனர். ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள திமுகவும், திரும்ப ஆட்சிக்கு வரும் முனைப்பில் அதிமுகவும் கூட்டணிகளை அமைத்து வருகின்றன. இந்தச் சூழலில் கூட்டணிகளின் காட்சிகள் யாரும் எதிர்பாரா விதமாக மாறத் தொடங்கியிருக்கின்றன.

திமுக, அதிமுக என இரண்டு தரப்பிலும் கூட்டணி குறித்துப் பேசிக்கொண்டிருந்த தேமுதிக, இறுதியில் திமுக கூட்டணி பக்கம் சாய்ந்திருக்கிறது. 2006ஆம் ஆண்டு முதன்முதலாகத் தேர்தலில் பங்கேற்ற தேமுதிகவில் விஜயகாந்த் தவிர யாரும் வெற்றிபெறவில்லை. இருந்தாலும் கணிசமாக வாக்குகளைப் பிரித்துத் தொங்கு சட்டசபை ஏற்படக் காரணமாக இருந்தது தேமுதிக.

இருபதாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அந்தச் சூழல் ஏற்பட்டிருப்பதாக ஒரு கருத்து உருவாகியிருக்கிறது. காரணம் விஜய்யின் அரசியல் வருகை. 2006 போன்ற ஒரு சூழல் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்கிறது திமுக. வாக்குகள் பிரிவதைக் கூடிய மட்டும் தடுக்க வேண்டும். இதுதான் தேமுதிகவைத் தங்கள் கூட்டணியில் திமுக சேர்த்ததற்கான மிக முக்கியமான காரணம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!