Home » கோடைக்கால நோய்கள்: பாதுகாத்துக் கொள்வது எப்படி?
மருத்துவம்

கோடைக்கால நோய்கள்: பாதுகாத்துக் கொள்வது எப்படி?

கோடைக்காலம் ஆரம்பமாகிவிட்டது. இலக்கியங்கள் இந்தக் காலகட்டத்தை வசந்தகாலம் என்று கொண்டாடுகின்றன. மரம், செடி, கொடிகளில் புதிய தளிர்கள் துளிர்த்து, பூக்கள் மலர்ந்து, தாவரங்கள் புத்துணர்ச்சி பெறும் காலம் இது. இந்த சீதோஷ்ண மாறுதல் இயற்கைக்கு ரம்மியத்தை அளித்தாலும், மனித உடலுக்குப் புதுப்புது உபாதைகளைக் கொண்டு வருகிறது. கொடும் வெப்பம், அதிக வியர்வை, அடங்காத தாகம், நீர்ச்சத்து வெளியேறுதல், உடல்சோர்வு, அரிப்பு போன்ற தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் கோடை நமக்குத் தரும் சோதனைகள்.

சிக்கன்பாக்ஸ் என்று மருத்துவர்களாலும், சின்னம்மை என்று பொது வழக்கத்திலும் அழைக்கப்படும் வைரஸ் தொற்றும் இந்தச் சமயத்தில்தான் மக்களுக்கு ஏற்படுகிறது. சிக்கன்பாக்ஸ், சின்னம்மை இவற்றின் பெயர்க்காரணத்தை முதலில் அறிந்துகொள்வோம்.

இந்த வைரஸ் தொற்றின் மூலம் உடலில் ஏற்படும் கொப்புளங்கள் பார்ப்பதற்குப் பட்டாணிப் பயறு (chick peas) போலத் தோற்றமளித்ததால் ஆங்கிலேயர் இதற்கு சிக்கன்பாக்ஸ் என்று பெயரிட்டனர். இதனைத் தமிழில் சின்னம்மை என்று அழைப்பதற்குக் காரணம், இந்த வைரஸ் தொற்று அடையாளம் காணப்படுவதற்கு முன்பு, அதாவது 1970களின் இறுதி வரையிலும் பெரியம்மை என்னும் கொடூரமான வைரஸ் தொற்று உலகில் இருந்து வந்தது. பலருக்கு மரணத்தையும், நோயிலிருந்து பிழைத்தோருக்கு மாறாத வடுக்களையும் வழங்கிய அதிபயங்கர வைரஸ் அது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!