சென்னையில் 184 வருடப் பாரம்பரியம் மிக்க கல்லூரி பச்சையப்பாஸ். ஊரில் எத்தனை கல்லூரிகள் இருந்தாலும், பச்சையப்பாஸ் கல்லூரியைத் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள். தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரை இந்தக் கல்லூரியின் மாணவர்தான். பல பிரபலங்கள் இந்தக் கல்லூரியில் படித்துள்ளனர்.
எல்லா வருடமும் தவறாமல் செய்திகளில் இடம் பிடித்து விடும் கல்லூரி பச்சையப்பாஸ், ஆனால் படிப்புக்காக இல்லை. பட்டாக்கத்தி வைத்துக்கொண்டு ரயிலில் பயணம் செய்வது, ரூட் எடுத்து பஸ்ஸில் அலம்பல் செய்வது, கலக்கல் கானா, அடிதடி, வெட்டுக்குத்து, கல் வீசுவது எனப் பிரபலமானவர்கள் பச்சையப்பாஸ் கல்லூரி மாணவர்கள். அதை யார் சொன்னது என்று கேட்காதீர்கள். அவர்களுடைய மாணவர்களே கானாவாக நிறைய பாடியுள்ளார்கள்.
ஒரு சாம்பிள் உங்களுக்காக.
‘ஆசைப்பட்டு படிச்சாங்க பல பேரு,
பச்சையப்பாஸ் புள்ளைங்கனாலே கோளாறு,
டவுட் இருந்தா யூடியூபுல நீ பாரு,
பச்சையபாஸ்க்கு ஏகப்பட்ட வரலாறு.’















Add Comment