Home » விண்வெளி via அரசுப் பள்ளி
கல்வி

விண்வெளி via அரசுப் பள்ளி

கண்டுலா ஜெஸ்ஸி

அரசுப் பள்ளியில் படிக்கும் கண்டுலா ஜெஸ்ஸி, நிலவைச் சுற்றி ஆராயும் செயற்கைக்கோளை உருவாக்கும் சர்வதேச அணியில் பங்கேற்கத் தேர்வு பெற்றுள்ளார். அறிவியல் மீதான இவருடைய ஆர்வத்தைக் கண்டறிந்த ஆசிரியர், இவருக்குச் சரியான பாதையில் வழிகாட்டியுள்ளார். இந்த மாணவியில் கடின உழைப்பு இவரை விண்வெளி வரை உயர்த்தியுள்ளது.

மிஷன் சக்திசாட் (Mission SakthiSAT) திட்டத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ஜெஸ்ஸி. இது சர்வதேச அளவில் மாணவிகள் பங்கேற்கும் நிலவு சார்ந்த க்யூப்சாட் (CubeSat) செயற்கைக்கோள் திட்டம். 108 நாடுகளிலிருந்து பன்னிரண்டாயிரம் மாணவிகள் இதில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் இருபது இந்திய மாணவிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கண்டுலா ஜெஸ்ஸி. தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது மாணவிகளில் இவர் மட்டுமே அரசுப் பள்ளியில் படிப்பவர்.

ஆந்திரப் பிரதேசத்தில் டௌலேஸ்வரத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கிறார் பதினான்கு வயதாகும் ஜெஸ்ஸி. இவரது இயல்பான அறிவியல் ஆர்வத்தையும் தேடல் மனப்பான்மையையும் கவனித்த இயற்பியல் ஆசிரியரும் அடல் டிங்கரிங் ஆய்வக வழிகாட்டியுமான மணிமாலா, கடந்த ஆண்டு சக்திசாட் விண்வெளி கல்வித் திட்டத்தில் பதிவு செய்ய ஜெஸ்ஸியை ஊக்கப்படுத்தியுள்ளார். அப்போதிலிருந்து, வழக்கமான பள்ளிப் பாடத்தைவிட மிக அதிகமான ஈடுபாடு தேவைப்படும் ஒரு பயணத்தை ஜெஸ்ஸி தொடங்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!