Home » ரீல்ஸுக்குத் தடா
கல்வி

ரீல்ஸுக்குத் தடா

டெல்லியின் கல்வித் துறை இயக்குநரகம், மார்ச் 25ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. பள்ளிகள் செயல்படும் நேரத்தில் இன்ஸ்ட்ராகிராம் ரீல்ஸ் எடுக்கக் கூடாது. சமூக வலைத்தளப் பதிவுகளுக்காகக் காணொளிகளைப் பதிவு செய்யக்கூடாது. இந்தத் தடை மாணவர்களுக்கு மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும், பள்ளி ஊழியர்கள் அனைவருக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, அவசரக் காலச் செய்தியாக அங்குள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.

மார்ச் முதல் வாரத்தில் கர்நாடக மாநில முதலமைச்சர் பதினாறு வயதிற்குக் கீழ் இருப்பவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுவதாக அறிவித்தார். மாநிலத்தின் நிதிநிலை அறிவிப்பில் இந்தத் தடை உத்தரவு இணைக்கப்பட்டிருந்தது.

கர்நாடகாவில் நிதிநிலை அறிக்கையில் இணையக் கல்விக்காக 47, 224 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டுத் தடையை இதோடு சேர்த்து வெளியிட்டிருக்கின்றனர்.

அதே நாளில், அடுத்த சில மணிநேரங்களிலேயே ஆந்திர மாநிலத்திலும் இதேபோன்றதொரு அறிவிப்பு வந்தது, சற்றே மாறுபட்ட விதிமுறைகளோடு. ஆந்திரத்தில் பதின்மூன்று வயதுக்குட்பட்டோருக்கு இணைய/சமூக வலைத்தளக் கட்டுப்பாடுகள் இருக்குமென்றும், அதை அமல்படுத்த தொண்ணூறு நாட்கள் அவகாசமும் அறிவிக்கப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!