Home » ராணுவம் ஆளும் ஜனநாயகம்
உலகம்

ராணுவம் ஆளும் ஜனநாயகம்

ஜூன் 1947ல் இந்திய பாகிஸ்தான் பிரிவினைக்கான அறிவிப்பை, பிரிட்டிஷ் இந்தியாவின் கடைசி ஆளுநர் மவுண்ட்பேட்டன் அகில இந்திய வானொலியில் அறிவித்தார். இந்திய பாகிஸ்தான் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து அதிகாரப் பரிமாற்றத்துக்கான திட்டத்தை முன்வைக்கும் பொருட்டு அந்த அறிவிப்பு வெளிவந்தது. . ஜூலை 1947ல் பிரிட்டிஷ் இந்தியாவின் ராணுவத்துறை இரு பாகங்களாகப் பிரிக்கப்பட்டது. சுமார் முப்பது சதவீத அளவில், ராணுவப் படைப் பிரிவுகள் பாகிஸ்தானுக்குப் பிரித்து அளிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் முதல் ராணுவத் தளபதியாக அயூப்கான் பொறுப்பேற்றார். ஆரம்பத்தில் தலைமைத் தளபதியாகவும், பிற்காலத்தில் பாகிஸ்தானின் ஜனாதிபதியாகவும் பதவி வகித்தார். பாகிஸ்தானின் ராணுவ விரிவாக்கத்திலும் நிர்வாகக் கட்டமைப்பிலும் பெரும் பங்காற்றினார். புதிதாகப் பிறந்த பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஒரு முழுமையான பயிற்சித் திட்டம் தேவைப்பட்டது. பாகிஸ்தானின் ராணுவ பயிற்சித் திட்டத்தை அயூப்கான் துல்லியமாக வகுத்தார். ராணுவத்தின் ஒவ்வொரு படைப்பிரிவும் அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணயித்தார். ராணுவ பயிற்சி அல்லாத நிர்வாக பணியில் உள்ளவர்களுக்கும் பயிற்சித் திட்டங்களை உருவாக்கினார். பாதுகாப்புத் துறைக்கான செலவுகள் பன்மடங்கு அதிகரித்தன. அயூப்கான் அசரவில்லை.

மே 1954ல் அமெரிக்காவும் பாகிஸ்தானும் பரஸ்பரப் பாதுகாப்பு உதவி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. பிரிகேடியர் ஜெனரல் ஹென்றி எஃப் மைரஸ் தலைமையிலான அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் குழு, கையெழுத்திடுவதற்கு இரு மாதங்கள் முன்னதாகவே பாகிஸ்தானுக்குச் சென்றது. பாகிஸ்தானின் ராணுவத் தளவாடங்களை ஆய்வு செய்தது. பாகிஸ்தான் ராணுவத்தை நவீனப்படுத்தும் வேலைகளில் இறங்கியது. அடுத்த நான்கு ஆண்டுகளில், பாகிஸ்தான் இராணுவத்தின் படைப்பிரிவுகள் விரிவடைந்தன. புதிய F-86 சேபர் (Sabre) போர் விமானத்தை இயக்க விமானப்படைகள் மேம்படுத்தப்பட்டன. அப்போதைய கிழக்கு பாகிஸ்தானில் இருந்த சிட்டகாங் மற்றும் மேற்கின் கராச்சி துறைமுகங்கள் நவீனமயமாக்கப்பட்டன. பாகிஸ்தான் ராணுவு அதிகாரிகள் தொழில்நுட்பப் படிப்புகளுக்காக அமெரிக்காவுக்குச் சென்றனர், மேலும் துருக்கி, ஈரான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் படைகளுடன் வழக்கமான பயிற்சிகள் நடத்தப்பட்டன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!