Home » பனிப் புயல் – 11
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 11

11 – பிரசாரமும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை

மார்ச் 26, 2000

குளிரைச் சமாளிக்கக் கழுத்துவரை மூடியிருந்த ஸ்வெட்டர் அணிந்து, தனது டாச்சாவில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தார் புதின். அவரது தேர்தல் பிரசாரக் குழுவும் உடனிருந்தது. மனைவி லூத்மிலா புதினா சோகமாக, உடல்நிலை சரியில்லாதது போலிருந்தார். ரஷ்யத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. ஐம்பத்து மூன்று சதவீத ஓட்டுகள் பெற்று இடைக்கால அதிபர் என்பதிலிருந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அதிபராக ரஷ்யாவின் அரியணையில் அமர்த்தப்பட்டுவிட்டார் புதின்.

வெற்றி உறுதியான பின்பு இருக்கையிலிருந்து எழுந்து நின்றார் புதின். ‘நான் தேர்தலில் போட்டியிடுவேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. சிரிக்காதீர்கள், நிஜமாகத்தான் சொல்கிறேன். நல்லவேளை இந்தத் தேர்தல் ஏற்பாடுகளை நீங்கள் கவனித்துக் கொண்டதால் நான் மக்களைச் சந்திக்கும் அவசியமிருக்கவில்லை. ஒத்துழைப்பு தந்த உங்கள் ஒவ்வொருவருக்கும் நன்றி’ என்றபடியே, சிவப்பு ஒயின் கிளாஸை உயர்த்தி அவர்களுக்கு அர்ப்பணித்தார். அப்போதும் மனைவி லூத்மிலா எந்த உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. அவரது கவலை அவருக்கு. ஒயினைக் காலி செய்த புதின், ‘நாளை முதல் நிறைய வேலைகள் இருக்கும், இன்று குடித்துத் தீர்த்துக்கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு படுக்கைக்குச் சென்று விட்டார். அவ்வளவுதான் அவரது கொண்டாட்டம்.

அடுத்த நாள் காலை புதின், எல்ஸினின் இல்லத்துக்குச் சென்று சந்தித்து, நன்றிகூறி வாழ்த்து பெற்றார். மனைவி லூத்மிலா டாச்சாவிலேயே தங்கியிருந்தார். ‘இதன்பிறகு நம் தனிப்பட்ட வாழ்க்கை முடிவுக்கு வந்துவிடும் என்பதை நினைத்தால் எனக்கு துக்கம் தாளவில்லை’ என்று நாள் முழுக்க அழுது தீர்த்தார். இந்தப் பதவி வேண்டாம், ராஜினாமா செய்து விடுங்கள் என்று புதினிடம் கெஞ்சிப் பார்க்கத்தான் நினைத்தார். ஆனால் நல்லவேளை அமைதி காத்தார். காதல் மனைவியானாலும் சொன்னால் கேட்டுவிடப் போகிறாரா என்ன?

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!