Home » அம்பதாயிரம் கோடிப் பே!
விளையாட்டு

அம்பதாயிரம் கோடிப் பே!

இந்திய ஆன்லைன் கேமிங் துறைக்கான புதிய விதிகள் வரும் மே 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகின்றன. PROG (Promotion and Regulation of Online Gaming) சட்டத்தின் கீழ் இப்புதிய விதிகள் நடைமுறைக்கு வர உள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தவும், சூதாட்டங்களைத் தடுக்கவும் OGAI (Online Gaming Authority of India) என்னும் ஆணையம் தொடங்கப்பட்டுள்ளது.

2025 ஆகஸ்ட்டில் PROG மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, பந்தயம் கட்டுவதிலும், சூதாட்டத்திலும் ஈடுபடும் இணைய விளையாட்டுத் தளங்கள் உடனடியாகத் தடை செய்யப்பட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாட்டில் மட்டும் ஆன்லைன் சூதாட்டத்தால் நாற்பத்தேழு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. சுமார் நாற்பத்தைந்து கோடி இந்தியர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

இதையடுத்து, இணைய விளையாட்டுகளுக்குத் தடை விதிக்குமாறு தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்கள் உயர் நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தன. ஆனால் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஷரத்து 19இன்படி அவை திறன் சார்ந்த விளையாட்டுகள் என்று நீதிமன்றங்கள் அவ்வழக்குகளை நிராகரித்தன.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!