2025ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே தங்கத்தின் விலை தொடர்ந்து. ஏறுமுகமாகப் போய்க்கொண்டிருந்தது. ஆனால் தங்கத்துக்கு அடுத்த ஆபரண உலோகமாக இருக்கும் வெள்ளியின் விலை மட்டும் தேமே என அமைதியாக இருந்தது.
அப்படிப்பட்ட வெள்ளியின் வரலாற்றில் கடந்த 2025 டிசம்பர் மாதம் 27ஆம் தேதி ஒரு பொன்னாள். அன்று வெள்ளி ஒரு கிராம் 285 ரூபாய்க்கும், கிலோ வெள்ளி 2,85,000 ரூபாய்க்கும் விற்பனையாகி வரலாறு படைத்தது. சென்ற வருடம் நிகழ்ந்த தங்கத்தின் விலையேற்றத்தோடு ஒப்பிடும்போது 2025இல் வெள்ளியின் விலையேற்றம் நான்கு மடங்கு அதிகம். சென்ற ஆண்டின் ஆரம்பத்திலிருந்த வெள்ளியின் விலையோடு ஒப்பிடும்போது டிசம்பர் மாதத்தின் வெள்ளியின் விலை சுமார் 200 மடங்கு அதிகம். வெள்ளியின் இந்த திடீர் விலையேற்றத்துக்கு என்ன காரணம்?
பொதுவாக, ஆபரணங்களின் விலையைப் பொறுத்த வரையிலும் வெள்ளி ஒரு நான்-ஃபெர்ஃபார்மர். ஒரேயடியான கடும் விலையேற்றமெல்லாம் அதன் அகராதியிலேயே கிடையாது. ஆனால் இந்த முறை தங்கத்தையும் விஞ்சி அது விலையேறி இருப்பதற்குப் பல காரணங்களைச் சொல்கிறார்கள். அந்தக் காரணங்களை வெள்ளியின் பயன்பாடுகள், உலகளாவிய பொருளாதார நிலைமை, ஏற்றுமதி-இறக்குமதிக் கொள்கைகள் என மூன்றாகப் பிரித்துப் பார்க்கலாம்.















Add Comment