எப்போது, எங்கிருந்து அழுத்தம் வரும் என்று தெரியாத அளவுக்கு எட்டுத் திசைகளிலும் ‘பிரஷர் குக்கர்’ வாழ்க்கைதான் பணிச்சூழலில் நிலவியது. சுற்றியிருந்த நண்பர்கள் பலர் கழன்று கொண்டபோதும், சிலர் கழட்டிவிடப்பட்டபோதும் ஒவ்வொரு நாளும் திகில் படத்தின் கிளைமாக்ஸ் போலவே இருந்தது, இருக்கிறது. ஐம்பது...
Tag - ஆண்டறிக்கை
ஷேக்ஸ்பியர் சொன்னது போல, உலகமெனும் நாடக மேடையில் நாமெல்லாம் நடித்துக் கொண்டிருக்கிறோம். அதிர்ஷ்டவசமாக இதில் கதாபாத்திரங்கள் முன்னதாகவே தீர்மானிக்கப்படுவதில்லை. வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் நாம் கேட்கும் வார்த்தைகள், நம் அனுபவங்கள் நம்மைப் பற்றிய நம்பிக்கைகள் ஆகின்றன. அந்த நம்பிக்கைகள் நமக்கு...
எழுத்தாளனாக இது என்னுடைய முதல் ஆண்டறிக்கை. அது ஒன்றே இந்த நிமிடத்தில் நான் மகிழ்ந்திருக்கப் போதுமானதாக இருக்கிறது. இந்த ஆண்டில் நான் புதிதாகப் பிறந்தேன் என்றுகூடச் சொல்லலாம். ‘மெட்ராஸ் பேப்பர்ல எழுதுங்க’ என்று ஆசிரியர் பாரா சொன்ன நாள்முதல் என் அன்றாடங்கள் நிறம் மாறின. ஓராண்டில் நான்...
2025 என் தொழில் வாழ்க்கையில் திருப்புமுனை ஆண்டு. இந்த வருடத் தொடக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாகச் செய்து வந்த தொழில்முறை மொழிபெயர்ப்பாளர் பணியிலிருந்து சிறிது காலம் விடுப்பு (sabbatical) எடுக்க வேண்டுமென்று எண்ணியிருந்தேன். அதேசமயத்தில் ஆசிரியர் பா.ராகவன், எழுத்துப் பயிற்சி வகுப்பு எடுக்கும்...
2025 ஜூலை 06. எப்போதும் போல ஒருநாளாக அன்றைய தினம் இருக்கவில்லை. ஆசான் பாராவுக்கு அனுப்பிய மின்னஞ்சலொன்றுக்கு அவரிடம் இருந்து பதில் வந்திருந்தது. எட்டே சொற்கள்தான். ‘இது வாட்ஸப் இலக்கம். வாருங்கள், பேச வேண்டும்.’ பொதுவாக மின்னஞ்சல் கணக்கை நான் அடிக்கடி பரிசோதிப்பதில்லை. ஆகவே அன்று...
இவ்வருடம் எனக்கு ஒரு பம்ப்பர் ஆண்டு. ஒருவழியாகத் தொடர்ச்சியாக எழுதுமளவுக்கு முன்னேறியிருக்கிறேன். ஆசிரியர் பாரா இல்லாமல் இது சாத்தியம் ஆகியிருக்காது. கல்லூரி நாட்களிலிருந்து தொடர்ச்சியாக வாசித்தாலும், பெரிதாக எதுவும் எழுதவில்லை. அவ்வப்போது வீறு கொண்டெழுந்து பிளாகில் எழுதுவேன். அதுவும் வருடம் ஒன்று...
‘தோற்காதவள்’ சென்ற ஆண்டு டிசம்பரில் வெளியானது. முதல் அச்சுப் புத்தகம். புத்தகம் எழுதி முடித்து வெளியாவது, பிரசவம் போன்ற அனுபவம்தான் என்பார் ஆசிரியர். வெளியாகி ஒரு மாதம் கழித்தே அதை முழுமையாக உணர முடிந்தது. கிண்டிலில் கமலா ஹாரிஸ் குறித்த புத்தகங்கள், தேடுபொறியில் அமெரிக்கத் தேர்தல்...
மெட்ராஸ் பேப்பர் எழுத்தாளர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நாள் வந்து விட்டது. எனக்குதான் அடிவயிறு சுருட்டுகிறது. லேசாகக் கண்ணைக் கட்டுகிறது. காரணம் கீழ்க்கண்ட பத்திதான். //எழுதி அந்தரத்தில் நிற்கும் நாவல், ஒரு புதிய நான்பிக்க்ஷன் என இரண்டும் இந்த ஆண்டு முடித்து விட வேண்டும் என்று உறுதியாக...
இந்த ஆண்டு நாள்தோறும் எழுதப் பழகியிருக்கிறேன். எனது துறை டிஜிட்டல் தொழில்நுட்பம். எனவே ‘என்ன எழுதலாம்’ என்று யோசிக்கத் தேவையில்லை. அவ்வளவு விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. பொம்மைக் கடைக்குள் நுழைந்துவிட்ட குழந்தையின் குதூகலமான மனநிலையை ஒத்தது இது. ஆண்டின் தொடக்கத்தில் மெட்ராஸ் பேப்பரில்...
2025 ஜனவரி பிறந்தவுடன் மனத்தினில் இருந்த எண்ணமெல்லாம் இந்த ஆண்டு புத்தகம் எழுதிவிடவேண்டும் என்பதே. அதற்கான முனைப்பில் பல்வேறு தலைப்புக்களில் சிந்திப்பதும், அதனைச் சீர்செய்வதுமாய் இருந்தேன். என்னுடையது முதல் புத்தகம், எனவே வாத்தியாரின் ஆலோசனைப்படி, அவர் காட்டும் வழியிலேயே அதனை ஆரம்பிக்க வேண்டும்...












