மதுரை வீரன்
மீனாட்சி அம்மன் கோவிலில் ஒரு மேடையில் வீரையன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தான். உயரே இருந்த சங்கிலிகளால் இரண்டு கைகளும் பிணைக்கப்பட்டிருந்தன. கால்களும் அவ்வாறே சங்கிலிகளால் பின்னப்பட்டிருந்தன.
மாறுகால், மாறுகை வாங்க வேண்டும் என்பது மன்னன் திருமலை நாயக்கனின் உத்தரவு. அதாவது ஒரு கை, ஒரு காலை வெட்ட வேண்டும். அப்படிச் செய்தால் உடலில் உள்ள ரத்தம் எல்லாம் வெளியேறிவிடும். துடிதுடித்து இறந்து போவான். இது ஒரு மறைமுகத் தூக்கு தண்டனை.
வீரையனுக்கு எதற்கு இப்படி ஒரு கொடூரமான மரண தண்டனை?
குறுநில மன்னனுக்கு மகனாகப் பிறந்தவன் வீரையன். பிறக்கும்போது தொப்புள் கொடி கழுத்தில் சுற்றியிருந்தது. அது மன்னருக்கும் ராஜ்யத்துக்கும் ஆகாது என்று கூறினார்கள். அதனால் காட்டுக்குள் ஒரு மரத்தடியில் அக்குழந்தையை வைத்துவிட்டார்கள்.
ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சின்னானும் அவன் மனைவியும் காட்டில் விறகு வெட்டச் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தை அழும் சத்தம் கேட்டது. அவர்களுக்கு வாரிசு இல்லை.















Add Comment