Home » 24- பன்னிரண்டு
24 தொடர்கள்

24- பன்னிரண்டு

24

சொற்களைச் செதுக்கிய நாடோடி

(மட்சுவோ பாஷோ)

கி.பி 17ஆம் நூற்றாண்டு. ஜப்பானின் சுமிதா நதிக்கரையோர எடோ நகரம் (இன்றைய டோக்யோ). அந்த நதிக்கரையோரத்தில், புல் கூரை வேய்ந்த ஒரு குடிசையின் கதவுகள் மெல்லத் திறந்தன. உள்ளே, கையில் எளிய மூங்கில் குச்சியை ஏந்தியபடி நின்றிருந்தார் மட்சுவோ பாஷோ.

பாஷோ தன் காலத்திலேயே ஜப்பான் தேசம் முழுவதும் புகழின் உச்சத்தில் இருந்த மாபெரும் கவிஞர். நூற்றுக்கணக்கான சீடர்களும் ரசிகர்களும் அவரைத் தேடி வந்தனர். ஆனால் அவர்களெல்லாம் அவருக்கு ஒரு பொருட்டல்ல. புகழும் கூட்டமும் தன் அக அமைதியைக் குலைப்பதாக நினைத்தார். அத்தனையையும் உதறித் தள்ளிவிட்டு, இயற்கையோடு ஒன்றி வாழும் ஓர் எளிய நாடோடித் துறவியாகத் தன் நாள்களைக் கடத்தினார்.

அன்றைய நாளின் தொடக்கம் அவரது வழக்கமான வேலையோடு ஆரம்பித்தது. கையில் ஒரு மூங்கில் துடைப்பத்தை எடுத்தவர், தன் குடிசையின் முற்றத்தையும், சுற்றிலும் விழுந்து கிடந்த காய்ந்த இலைகளையும் மெல்லக் கூட்டிப் பெருக்கினார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!