Home » ஒரு குடும்பக் கதை – 222
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 222

222. மேனகா காந்தி வெளியேற்றம்

கடும் கோபமடைந்த இந்திரா, மீண்டும் தன் வீட்டில் தன் உத்தரவை மீறிய, தன்னை மதிக்காத மருமகள் மேனகா காந்தி மீது வார்த்தைகளால் அல்லாமல் எழுத்துப்பூர்வமாகத் தன் கோபத்தை வெளிப்படுத்தினார்.

ஆமாம்! மேனகா காந்திக்கு காட்டமாக ஒரு கடிதத்தை எழுதினார். அதில், திருமணமான நாள் முதலே பாரம்பரியம் மிகுந்த, நாடே மதிக்கும் ஒரு குடும்பத்தின் மருமகள் என்பதை மறந்து, முரட்டுத்தனமாகவும் திமிராகவும் மேனகா நடந்துகொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அந்தக் கடிதத்தில் அவர்களுடைய குடும்பப் பின்னணி மற்றும் கலாசாரத்தில் உள்ள வேறுபாட்டையும் குத்திக்காட்டி இருந்தார்.

அது மட்டுமின்றி, மேனகா தன் குடும்பத்துக்கு எதிராகச் சதி செய்வதாகக் குற்றம் சாட்டியதுடன், ‘எதிர்காலத்தில் ஒழுங்காக நடந்துகொள்ளத் தயாராக இல்லாவிட்டால், வீட்டை விட்டு வெளியேறி உன் தாயிடம் திரும்பிச் சென்றுவிடு’ என்று உத்தரவிட்டிருந்தார்.

மேனகா காந்தியோ, தன் மீதான தன் மாமியாரின் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் கடுமையாக மறுத்துப் பதில் கடிதம் எழுதினார். அது 1982 மார்ச் 31 அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் வெளியானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!