உதவிக்கு ஒரு கை
அன்று ஜாஷுவா டைலருக்கு 17ஆவது பிறந்த நாள். உற்சாகமாக இருந்தான். இனி அவன் தானே வாகனம் ஓட்டிச் செல்லலாம். அமெரிக்காவில் வாகனம் ஓட்டும் உரிமம் என்பது பறவைகளுக்குச் சிறகுகள் போல. அது சுதந்திரம்.
ஆனால் இனப்பாகுபாடு காணும் சில காவலர்களுக்கு அப்படியில்லை.
கறுப்பு நிறத்தவர்களை எந்தக் காரணம் காட்டியாவது நிறுத்துவார்கள். 25 மைல் வேகம் போகும் சாலையில் 27 மைல் வேகத்தில் போன சின்ன காரணம் கூட போதும்.
மெலிண்டா, அதைத்தான் ஜாஷிடம் சொன்னாள்.
“உன் உற்சாகம் புரிகிறது. ஆனால் நீ கவனமாக இருக்க வேண்டும்.”
“மாம், என் நண்பன் ரீவ்ஸ் இப்படி எல்லாம் கவலைப்படவில்லை,” என்று சிரித்துக்கொண்டே சொன்னான் ஜாஷ்.
“ரீவ்ஸும் நீயும் ஒன்றல்ல ஜாஷ்.” அந்த கசப்பான உண்மையைச் சொல்ல மெலிண்டாவுக்கும் கசந்தது.
















Add Comment