Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 46
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 46

வேகம்

டிம் குக் தலைமையில் ஆப்பிள் வேகமெடுத்தது. நிகர லாபம் பதின்மூன்று பில்லியன் டாலர் என்னும் நிலையை எட்டியது. இது பலரும் எதிர்பார்த்ததைவிட அதிகம்.

இந்த வெற்றியில் பெரும் பங்கு ஐஃபோனையும் ஐபேடையுமே சாரும். அவை பரபரப்பாக விற்றுத் தீர்ந்துகொண்டிருந்தன.

இவையெல்லாம் நற்செய்திகள். சில இடையூறுகளும் இருக்கவே செய்தன. ஆப்பிள் அபரிமிதமான லாபம் ஈட்டியது. அதேவேளையில் அதன் ஸ்டாக் மார்க்கெட் மதிப்பு இறங்கிக் கொண்டிருந்தது.

இதற்கான முக்கியக் காரணம் ஆண்ட்ராய்ட் காட்டிய அதிரடி. பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டு இக்கருவிகளை விற்றன.

ஆப்பிள் போன்ற மிகப் பெரிய நிறுவனத்தின் வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது கடினம். எத்தனை பில்லியன் கூடினாலும் வளர்ச்சி சதவீதம் என்று காட்டும்போது குறைவாகவே தெரியும். பெரிதினும் பெரிதும் கேட்பதில் உள்ள சிக்கல் இது. அல்லது சிறியதாய் இருப்பதில் உள்ள வசதி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!