205. பிரதமர் சரண் சிங்
டார்ஜிலிங் பயணம் இந்திரா காந்தி குடும்பத்துக்கு மகிழ்ச்சியளிக்கும் ஒன்றாகவே அமைந்தது. சிறப்பு நீதிமன்றம் எடுக்கப்போகும் நடவடிக்கை பற்றி எல்லாம் கவலைப்படாமல், இந்திரா காந்தி டார்ஜிலிங்கின் மலைப்பகுதிகளில் காலாற நடந்தார். இயற்கையை ரசித்தார்.
அதே போல் சஞ்சய் காந்தியும் மேனகாவும் டெல்லி அரசியல் டென்ஷன்களை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, சந்தோஷமாக டார்ஜிலிங்கின் அழகை அனுபவித்தார்கள்.
டெல்லி திரும்பி சில நாட்களுக்குப் பிறகு மேனகா அந்த சந்தோஷ சேதியைத் தெரிவித்தார். ஆம்! மேனகா காந்தி கருவுற்றிருந்தார். தகவல் அறிந்த பாட்டி மிகவும் அகமகிழ்ந்தார்.
தானே சென்று ராஜீவ் மற்றும் சோனியாவிடம் மகிழ்ச்சியோடு அந்தத் தகவலைப் பகிர்ந்து கொண்டார். அவர்கள் சஞ்சய் தம்பதிக்கு வாழ்த்துகள் சொன்னார்கள்.
நரேந்திர மோடி 2016இல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததை எல்லோரும் அறிவோம். ஆனால், மொரார்ஜி தேசாய் 1978இலேயே இப்படி ஒரு அதிரடியான நடவடிக்கையை எடுத்தார்.















Add Comment