நலமறிய ஆவல்
ஆப்பிள் ஈக்கோ சிஸ்டத்தின் மையம் ஐ.ஓஎஸ். எனவே அதைத் தொடர்ந்து அப்டேட் செய்துவந்தது ஆப்பிள். அந்த வரிசையில் அடுத்து வந்த வெர்ஷன் iOS 8. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் அறிமுகமாயின.
ஹெல்த் ஆப் என்றொரு செயலி வந்தது. அறிமுகமானபோது இது பின்னாளில் கொண்டுவரவிருக்கும் மிகப்பெரிய மாற்றங்களை ஆப்பிள் குழுவினரே கூட அறிந்திருக்கவில்லை.
டிம் குக் தனது உடல்நலனைப் பேணுவதில் எக்குறையும் வைப்பதில்லை. இதிலும் அவர் ஜாப்ஸிடமிருந்து முற்றிலும் மாறுபட்டவராக இருந்தார்.
உடல்நலம் சார்ந்த துறைகளில் தகவல் தொழில்நுட்பம் பெரும் புரட்சி செய்யவிருக்கிறது என்று தனது குழுவினரிடம் குக் கூறிவந்தார். அவர்களில் பலருக்குமே கூட இதில் நம்பிக்கை இல்லை.
மாற்றங்கள் வருமென்று நம்பினர். ஆயினும் குக் சொல்லும் அளவுக்கான வணிகம் இதன் மூலம் நடக்கும் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.















Add Comment