Home » பனிப் புயல் – 47
தொடர்கள் பனிப் புயல்

பனிப் புயல் – 47

முகங்கள் போதும்

03- பிப்- 1990. குடும்பத்துடன் தனது சொந்த ஊரான செயின்ட் பீட்டர்ஸ்பர்க் வந்து சேர்ந்தார் வலோத்யா. கிழக்கு ஜெர்மனியிலிருந்து அடுத்து மாஸ்கோ செல்கிறாயா அல்லது செயின்ட் பீட்டர்ஸ்பர்கா என்று கேட்டிருந்தார்கள். பணி என்ன என்பதைச் சொல்லவில்லை. வலோத்யா யோசிக்க நேரம் எடுத்துக்கொள்ளவில்லை. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் செல்கிறேன் என்றார்.

கிழக்கு ஜெர்மனியின் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு நேர்ந்ததை நேரில் பார்த்ததன் விளைவு அது. எவ்வளவு கஷ்டப்பட்டு கேஜிபி அதிகாரி ஆகியிருந்தாலும் ஒரே இரவில் அனைத்தும் மாறிவிடும் அபாயம் உண்டு என்பதை உணர்ந்திருந்தார். சொந்த வீடு, வயதான பெற்றோர், பிறந்து வளர்ந்த ஊர் என எப்படிப் பார்த்தாலும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கே அவருக்குப் பாதுகாப்பான தேர்வு. வேலை போனாலும் பிழைக்க வேறு வழியாவது இருக்கும்.

அவர் அங்கிருந்த பல்கலைக்கழகத்தில் படித்திருந்தது கேஜிபிக்கும் சாதகமாக இருந்தது. அக்கல்லூரியின் சர்வதேச உறவுகள் பற்றிய பாடப்பிரிவின் துணைத் தலைவராகச் சேர்ந்தார் வலோத்யா. அவர் கேஜிபிக்குப் பணிபுரிவது அங்கு யாருக்கும் தெரியாது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!