பணம்
ஒரு நாளில் நாம் அதிக நேரம் பார்ப்பவை திரைகள். ஃபோன், மானிட்டர், டிவி என எங்கெங்கும் பயனர்களைக் கவர்வதில் திரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
ஆப்பிள் கருவிகளின் சிறப்புகளில் ஒன்று அவற்றின் திரைகள். படங்களை மட்டுமல்லாது எழுத்துகளையும் திருத்தமாகக் காட்டும் வல்லமை அவற்றுக்கு உண்டு. தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இதன் தேவை புரியும்.
அதுவரை வந்த ஐஃபோன் திரைகள் சிறப்பானவைதான். ஒரே ஒரு குறை. அவற்றின் அளவு. சிறிய அளவிலான திரைகள் அவை.
இவ்வாறான வடிவமைப்புக்கும் ஒரு காரணம் இருந்தது. இது ஜாப்ஸின் முக்கியமான முடிவுகளில் ஒன்று. ஃபோன் என்றால் கைக்கு அடக்கமாக இருக்கவேண்டும். ஒற்றைக் கையால் இயக்கும் அளவில் இருப்பது நல்லது.
ஐஃபோன்கள் அப்படித்தான் இருந்தன. ஆனால் அதை மாற்ற வேண்டிய சூழல் வந்தது. ஐஃபோன் 6 மற்றும் 6 பிளஸ் வெர்ஷன்கள் அறிமுகமாயின.















Add Comment