1950 கால கட்டம். இந்தியாவில் உணவுத் தட்டுப்பாடு அதிக அளவில் இருந்தது. சிறிது காலம் முன்னர், அதாவது 1943-இல் தான் அதிபயங்கர வங்காளப் பஞ்சம் ஆட்டிப்படைத்திருந்தது. இதன் பலி எண்ணிக்கை வங்காளத்தில் மட்டும் 38 லட்சம் பேர். உணவின்றி இவ்வளவு பேர் இறந்துள்ளார்கள் என்பது நம் தலைமுறையினருக்கு நம்ப முடியாததாக...
Author - நந்தினி கந்தசாமி
![]()
செப்டம்பர் 10 ஞாயிறு இரவு. லிபியாவின் கடற்கரை நகரமான டெர்னாவில் ஒரே மழை. ‘டேனியல்’ புயல் மையம் கொண்டிருந்ததால் 9-ஆம் தேதியிலிருந்தே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பாதி வருடத்தில் பெய்ய வேண்டிய மழையின் அளவு ஒரே நாளில் பெய்தது. மக்கள் அச்சத்திலிருந்தனர். வெள்ளம் வருமோ..? அணைகளைப் பற்றிப் பல காலமாக...
கடந்த வெள்ளிக்கிழமை இரவு 11.10. வாரத்தின் சிறந்த நாளாக முஸ்லிம் மக்கள் நினைக்கும் நாள் வெள்ளி. வாடிக்கையாகச் செய்யும் தொழுகையுடன் சேர்த்து, சிறப்புத் தொழுகைகளும் அன்று இருக்கும். மொராக்கோவின் மெரகேஷ் நகரத்தில் உள்ள பழம்பெரும் மதினாவாவிலும் சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. உறங்கும் முன்...
உலகமே இன்று இயற்கையை நோக்கித் திரும்ப முயல்கிறது. தம்மால் முடிந்த நடவடிக்கைகளைத் தனிமனிதனும், அரசும் இணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அதில் ஒன்றுதான் பசுமைக் குடில் வாயுக்களைக் (green house gases) குறைப்பது. பசுமைக்குடில் வாயுக்கள் பூமி வெப்பமயமாதலை அதிகப்படுத்தும். இந்தியாவின் பசுமைக்...
இமாசல பிரதேசத்தில் ஓரிடம். ஏதோ ஒரு தொகுதி, ஒரு வார்டு. தொடர்ந்து மழை பெய்துகொண்டிருப்பதில் கவலையடைந்த கவுன்சிலர் பிட்டு பண்ணா, தனது வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். பல வீடுகள் மழையில் சேதமடைந்திருந்தன. ஏராளமான விரிசல்கள். உடனே ரிப்பேர் செய்யுங்கள்; இல்லாவிட்டால் பிரச்னையாகும்...
அது எண்பதுகளின் தொடக்கம். அமெரிக்காவுக்கும் அன்றைய சோவியத்துக்கும் இடையே பனிப்போர் ஆரம்பித்து உக்கிரமடையத் தொடங்கிய நேரம். முதல் ஆப்பிள் கம்ப்யூட்டர், விண்டோஸ் என்று பல தொழில்நுட்பங்களும் வர ஆரம்பித்த வேளை. பல நாட்டுக்காரர்களும் புதிது புதிதாக என்னென்னவோ கண்டுபிடித்துக்கொண்டிருந்த போது, நம்மாள்...
பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரப் பகுதியில் இயங்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு முன்பெல்லாம் இளைஞர்கள் தன்னிச்சையாக வந்து சேர்வார்கள். அந்தளவுக்கு மிக இளம் வயதிலேயே அவர்களுக்கு மதரசாக்களில் மூளைச் சலவை செய்து வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இப்போது சில ஆண்டுகளாக, எவ்வளவு உந்தித் தள்ளினாலும் யாரும்...
தென்கொரியா என்றாலே உங்களுக்கு என்ன தோன்றும்? இளம் ஜோடிகள் சியோல் நகரம் முழுக்கச் சிறகடித்துப் பறப்பார்கள். அழகான, சுத்தமான நகர வீதிகள், கண்ணைப் பறிக்காத மிதமான வண்ணங்கள், விரல்களிலேயே ஹார்டின் விடும் வித்தைக்காரர்கள் நிறைந்த ஊர் என்று தானே தோன்றும்.? நாம் காணும் கொரியக் காதல் நாடகங்களில்...
ஷேர் மார்க்கெட்டின் ஏற்ற இறக்கங்களைக் கூட சமாளித்து விடலாம். ஆனால் காய்கறி மார்க்கெட்டின் விலையைச் சமாளிக்க முடியவில்லை. ஒருநாளைக்கு ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் ஏறினால் பரவாயில்லை… இரவோடு இரவாக இருபது முப்பது ரூபாய் ஏறிவிடுகிறது. வருடத்தில் ஏதாவது ஒரு மாதம் ஒரு காய்கறி உச்சபட்ச விலையில்...
பால்சன் வெண்ணெய். குஜராத்தின் ஆனந்த் பகுதியில் தொடங்கப்பட்ட ஒரு வெண்ணெய் நிறுவனம். சுதந்திரத்திற்கு முந்தைய இந்தியச் சந்தையில் இவர்கள்தான் நம்பர் ஒன். ஏனென்றால் இருந்ததே ஒரே ஒரு வெண்ணெய் தயாரிக்கும் நிறுவனம்தான்! தனிக்காட்டு ராஜா. இவர்கள் வைத்ததுதான் விலை. பால் பொருட்களை விற்கும் விவசாயிகளும்...














