தொலைக்காட்சியில் ஒரு துறவி, மனிதன் மட்டுமே நடப்பதற்கு என நடப்பவன் என்றார். வேறு எந்த விலங்கும் ‘எக்சர்சைஸ்’ என்று எதுவும் செய்வதில்லை.
நம் பார்வைக்கு அப்படித் தெரிந்தாலும் நாயும், கன்றும், பூனையும் உடல்நலக் குறிக்கோள் எதுவும் இன்றி விளையாடுகின்றன. காட்டு விலங்குகளில் உயிர் பிழைத்தல் என்பது சவால். மிருகக் காட்சி சாலைகளில் கூண்டுகளில் வாழும் விலங்குகள் எளிதில் நோய்வாய்ப்படுகின்றன என்கிறார்கள். விலங்குகளில் உயிருக்கு ஓரளவு உத்தரவாதம் கிடைத்த இடமே சோம்பலின் ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும்.
நகரங்களில் கடைகளுக்கு இணையாகப் பெருகி வரும் உடற்பயிற்சிக் கூடங்கள் எங்கிருந்து தொடங்கின? உடற்பயிற்சி உயிர் காக்கும் என்று மனிதன் எப்போது அறிந்தான்? எல்லா நாடுகளிலும் போர்க்கலை சார்ந்த உடற்பயிற்சிகள் இருந்திருக்கின்றன. படை வீரனல்லாத மனிதன் எப்போது உடற்பயிற்சியைச் சிகிச்சை என எண்ணத் தொடங்கினான்?
















Add Comment