ஜனவரி 2023-இல் சென்னையில் சர்வதேசப் புத்தகக் காட்சி நடைபெறும் என்று அரசு அறிவித்திருக்கிறது. இது ஒரு மகத்தான முன்னெடுப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால் வழக்கமான சென்னை புத்தகக் காட்சி பொங்கலைச் சுற்றி இரண்டு வாரங்கள் நடைபெறும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருக்கையில் மூன்று நாள் சர்வதேசக் கண்காட்சி என்பது சென்னை மக்களைச் சிறிது குழப்பி இருக்கிறது. மூன்று நாள் சர்வதேசம் என்றால் மற்ற நாளெல்லாம் என்ன? அல்லது இம்முறை மூன்று நாள் மட்டும்தான் புத்தகக் காட்சியா? அல்லது இது தனியே அது தனியே நடக்குமா? இது முடிந்தபின் அதுவா, அது முடிந்தபின் இதுவா? சர்வதேசக் கண்காட்சிக்கும் பபாசிக்கும் சம்பந்தம் உண்டா அல்லது அரசு தனியே நடத்துமா – இச்சந்தேகங்கள் எல்லாம் இனி வரும் நாள்களில் தீர்க்கப்பட்டுவிடும்.
இதைப் படித்தீர்களா?
வையமெங்கும் வாழ்ந்து மரித்த அத்தனைப் பெண்களும் பாவம் ஏந்தித் தாங்கும் பழிகற்கள் என்றா நினைத்தாய்? உயிரல்லவா?
வாரத்துக்கு 150 நிமிடம் மிதமான உடற்பயிற்சி போதும் என்கிறது. இதைத் தினமும் செய்யத் தேவையில்லை. வாரம் முழுவதும் பிரித்துக் கொள்ளலாம்.
















Add Comment