மெட்ரோ நிலையங்களில் நடைமேடைகளும் பளிச்சென்று இருக்கும். கூட்டம் அதிகம் இருந்தாலும் இரைச்சல் இருக்காது. சுற்றிலும் கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்கும். ஆண், பெண் எனக் குறைந்தது இரண்டு ஊழியர்கள் நடைபாதையை மேற்பார்வை செய்வார்கள்.
சுரங்கப்பாதை நிலையங்களில் தண்டவாளத்துக்கு இருபுறமும் கறுப்புக் கண்ணாடியால் மூடி வைத்திருப்பார்கள். திரைக்குப் பின்னாலிருந்து, சாய்த்து விடப்பட்ட ராக்கெட் போல மெட்ரோ சர்ரென வரும். அந்த வெளிச்சத்தில்தான் தண்டவாளம் என ஒன்று இருப்பதே புலப்படும்.
நடைமேடையிலிருந்து மேலே ஏறுவதற்கு இரண்டு எஸ்கலேட்டர்கள் வைத்திருப்பார்கள். இறங்குவதற்குப் படிக்கட்டுகள்தான். மின்தூக்கிகள் இருந்தாலும் ரயிலைப் பிடிக்கும் அவசரத்துக்கு அவற்றைப் பயன்படுத்த முடியாது.















Add Comment