Home » ஒரு குடும்பக் கதை – 213
குடும்பக் கதை தொடர்கள்

ஒரு குடும்பக் கதை – 213

213. அமோக வெற்றி

அமேதி நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராஜீவ் காந்திக்கு அமேதி என்ற பெயர் ஓரளவுக்குப் பரிச்சயமானதுதான்.

அந்தத் தொகுதியில் தன் தம்பி சஞ்சய் காந்தி ஒருமுறை படுதோல்வி அடைந்திருக்கிறார்; இன்னொரு முறை அமோக வெற்றி பெற்றிருக்கிறார் என்பது அவருக்குத் தெரியும். ஆனால் அந்தத் தொகுதியின் பக்கம் அவர் தலை வைத்துப் படுத்ததில்லை.

அமேதியில் அமோக வெற்றி பெற்ற சஞ்சய் காந்தி ஆறே மாதத்தில் அகால மரணம் அடைய, இப்போது ராஜீவ் காந்தியை அமேதிக்கு வரும்படியான சூழல் ஏற்பட்டுவிட்டது.

உள்ளூர் காங்கிரஸ் புள்ளிகளான சஞ்சய் சிங், அமைச்சர் வீர் பகதூர் சிங் இருவரும் ராஜீவ் காந்தியின் கூடவே இருந்தார்கள். அவர்கள்தான் அமேதி மக்களுடனான ராஜீவ் காந்தியின் சந்திப்புக்குப் பந்தல் எல்லாம் போட்டு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

பத்திரிகையாளர்கள் வேண்டாம் என்று முதலிலேயே சொல்லிவிட்டார் ராஜீவ் காந்தி. ஆனாலும், சில லக்னோ பத்திரிகையாளர்கள் மோப்பம் பிடித்துக் கொண்டு அமேதி வந்துவிட்டார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!