பச்சைப் பொய்கள்
பச்சைப் பொய்களில் முதலாவது வகைப் பொய்கள், அவமானத்தையும் சங்கடத்தையும் தவிர்ப்பதற்காகச் சொல்லப்படுபவை எனப் பார்த்தோம். இரண்டாவது வகைப் பொய்கள், தன் மீது நேர்மறை எண்ணத்தை ஏற்படுத்தும் பொருட்டு சொல்லப்படுபவை. பாதுகாப்பற்ற உணர்வு, இவ்வகைப் பொய்களுக்கான முகாந்தரமாக இருக்கிறது. தான் விரும்புவது தனக்குக் கிடைக்காதோ என்ற எண்ணத்தால் இப்பொய்கள் சொல்லப்படுகின்றன.
இத்தகைய பொய்களின் வீரியம் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் இருக்கலாம். பேருந்தில் சிறிய நசுங்கல்களையும் கீறல்களையும் பட்டி டிங்கரிங் பார்ப்பதாக இருக்கலாம். அல்லது சுந்தரா டிராவல்ஸ் பேருந்தைப்போல இலைகளால் ஓட்டை உடைசல்கள் அலங்கரிக்கப்பட்டிருக்கலாம்.
‘நாங்கள்லாம் துபாய்ல இருந்த இருப்புக்கு…’ என்ற ரீதியிலான இவ்வகைப் பொய்களைப் பெரும்பாலும் எல்லாருமே சொல்கிறோம். சம்பளத்தைக் கூட்டிச் சொல்வது, வயதைக் குறைத்துச்















Add Comment