Home » விஜய் ஆட்சி: முதல் மாத ரிப்போர்ட்
தமிழ்நாடு

விஜய் ஆட்சி: முதல் மாத ரிப்போர்ட்

முதல்வர் விஜய்

2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களில் வென்றது. போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு கடந்த மே 10ஆம் தேதி விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டார்.

இரண்டு மாதங்களில் 500 யூனிட் வரை பயன்படுத்துவோருக்கு 200 யூனிட்கள் வரை இலவச மின்சாரம், பெண்களுடைய பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை, போதைப்பொருள் தடுப்புக்காக மாவட்டம்தோறும் சிறப்பு அதிரடிப்படை ஆகிய மூன்று திட்டங்களைத் தொடங்குவதற்கான கோப்புகளில் விழா மேடையிலேயே கையெழுத்திட்டார்.

கடந்த ஆட்சியில் திமுக அரசு பத்து லட்சம் கோடி கடனோடு கஜானாவைத் துடைத்துவிட்டுச் சென்றதாகத் தனது அறிமுக உரையில் குற்றம் சாட்டியிருந்தார். அரசு இயந்திரத்தின் உண்மைநிலையை அறிய வெள்ளை அறிக்கை வெளியிட விரும்புவதாகவும், தன் தலைமையிலான ஒற்றை அதிகார மையத்தின் ஊடாகவே அரசு இயங்கும் எனவும் தெரிவித்திருந்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!