Home » 24 – மூன்று
24 தொடர்கள்

24 – மூன்று

24

தத்துவக் குடியரசின் விடியல்

(பிளேட்டோ)

கி.மு நான்காம் நூற்றாண்டின் ஏதென்ஸ் நகரம். மேற்கத்திய தத்துவத்தின் தொட்டில். நகரின் வடமேற்கில் ஆலிவ் மரக்காடுகள் இருந்தன. அங்கு உயரமான பிளேன் மரங்களும் (plane trees) நிழலான நடைபாதைகளும் சூழ்ந்திருந்தன. அதன் நடுவே அமைந்திருந்தது ‘அகாடமி’. அதுதான் பிளேட்டோ நிறுவிய முதல் பல்கலைக்கழகம்.

வளாகத்தின் மையத்தில் எளிய கல் வீடு இருந்தது. தத்துவஞானியின் இருபத்தி நான்கு மணிநேரமும் இங்குதான் கழிந்தது. பிரபஞ்சத்தின் உண்மைகளை ஆராய்வதே அவரது நாளின் நோக்கம்.

அக்கால மக்களின் பொழுதுகள் கடிகாரத்தால் நகரவில்லை. அவர்கள் பளிங்குத் தூண்களின் நிழல்களைக் கவனித்தார்கள். அந்த மர நிழல்களே அவர்களுடைய கடிகாரங்கள்.

சேவல் கூவுவதற்கு முன்பே பிளேட்டோ விழித்துக் கொள்வது வழக்கம். அவர் ஆடம்பரமான படுக்கைகளை முற்றிலும் வெறுத்தார். எளிய மரக்கட்டிலில் கம்பளி போர்த்தித் தூங்கினார். எழுந்தவுடன் அவர் செய்த முதல் காரியம், ஏதென்ஸின் ஞானக் கடவுளான அத்தீனாவுக்கும், கலைகளின் கடவுளான அப்பல்லோவுக்கும் நன்றி செலுத்துவதாக இருந்தது. அதன் பிறகு, அகாடமியின் அமைதியான சூழலில் சில நாழிகைகள் மௌனமாக அமர்ந்து தியானிப்பதில் நேரத்தைச் செலவிட்டார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!