உடல் ஆரோக்கியத்தைக் காப்பதற்கு இரண்டு செயல்கள் அவசியம். ஒன்று, தினமும் உடற்பயிற்சி செய்வது. இரண்டாவது, நல்ல ஊட்டச்சத்தான உணவைச் சரியான அளவில் சாப்பிடுவது. இதில் உடற்பயிற்சிக்கு உதவ இணையத்தில் ஆயிரக்கணக்கான செயலிகள் கிடைக்கின்றன. ஆனால் தினமும் ஒவ்வொரு வேளையும் எந்தளவு சாப்பிடுகிறோம், அதில் சரியான அளவில் ஊட்டச்சத்துக்கள் இருக்கிறதா என்பதைத் தொடர்ந்து கண்காணிப்பது மிக மிகக் கடினம்.
இந்தப் பணியை எளிமையாக்க ரயன் ஆஷ்க்ராஃப்ட் (Ryan Ashcraft) எழுதிய செயலிதான் ஃபுட்நாம்ஸ் (Foodnoms). ஆப்பிள் ஐஃபோன், ஐபேட் மற்றும் மேக் கணினிகளில் மட்டும் கிடைக்கும் செயலி.
இந்தச் செயலியில் என்ன செய்யலாம்?
செயலியைத் தொடங்கியவுடன், உடல் ஆரோக்கியத்தில் உங்களின் நோக்கம் என்ன என்று கேட்கும். உடல் எடையைக் குறைக்க வேண்டுமா, இல்லை ஏற்ற வேண்டுமா? குடிக்கும் காபி, டீ அளவைக் கணக்கிட வேண்டுமா? தினமும் உண்ணும் உணவில் நார்ச்சத்தை அதிகரிக்க வேண்டுமா, புரதத்தை அதிகரிக்க வேண்டுமா, மாவுச்சத்தைக் குறைக்க வேண்டுமா? அருந்தும் மது அளவைக் குறைக்க வேண்டுமா? உண்ணாவிரதம் இருக்க வேண்டுமா? போதுமான அளவு தண்ணீர் குடிக்கிறீர்களா எனப் பார்த்துக் கொள்ள வேண்டுமா? ஒட்டுமொத்தமாகக் கலோரி எண்ணிக்கையை மாற்ற வேண்டுமா? என்று பல விவரங்களைக் கோரும். அவற்றிலிருந்து உங்களின் விருப்பங்களைத் தேர்வு செய்ய வேண்டும். அதைக் கொண்டு உங்களுக்கான அறிவுரைகளை புட்நாம்ஸ் வழங்கத் தொடங்கும்.















Add Comment