ஐஃபோன் ஃபோல்டபிள்
பல ஆண்டுகளாக வரும் வரும் என எதிர்பார்த்தது வந்தேவிட்டது – ஐஃபோன் டூவோ (iPhone Duo).
இந்த வகைக் கருவியை செல்பேசியையும் டேப்லெட்டையும் (ஐபேடு) இணைத்துச் செய்த கலப்பினம் என்று சொல்லலாம். இதில் இருக்கும் உள்திரை பெரியதாக இருக்கும், தேவையில்லாதபோது நடுவில் மடித்துச் சிறியதாக்கி எடுத்துச் செல்லலாம். மடித்த பின்னர் தெரியும் வெளிப்புறத்திலும் திரை இருக்கும். அதைக் கொண்டும் பேசலாம், படம் எடுக்கலாம், எல்லாச் செயலிகளையும் பயன்படுத்தலாம்.
ஃபோல்டபிள் ஃபோன் (Foldable Phone) என அழைக்கப்படும் இவற்றை 2019ஆம் ஆண்டில் இருந்து கொரியாவின் சாம்சங்கும், சீனாவின் ஹூவாவேயும் ஆண்டுக்கு ஒரு புதுப் பதிப்பை வெளியிட்டு வருகிறார்கள். பல லட்சம் பயனர்கள் இவற்றை விரும்புகிறார்கள். ஆனாலும் இந்த வகை செல்பேசிகள் விளிம்பு நிலையிலேயே இருந்தன. உலகின் முன்னணி செல்பேசி நிறுவனமான ஆப்பிள் டூவோவை அறிவித்திருப்பதால் ஃபோல்டபிள் ஃபோன்களை இனி பரவலாகப் பார்க்கலாம்.
















Add Comment