தெஹ்ரானின் யுரேனியம் செறிவூட்டல் திட்டம் தொடரும் என்று இரானின் அதிபர் மசூத் அறிவித்துள்ளார். இஸ்ரேலுடனான போருக்கு இரான் தயார் நிலையில் உள்ளது என்றும் எச்சரித்துள்ளார்.
சென்ற மாதம் இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே கடும் மோதல்கள் நிகழ்ந்தன. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தலையிட்டு இரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இரானின் அணுசக்தி நிலையங்களை முற்றிலும் தகர்த்துவிட்டதாக டிரம்ப் தம்பட்டம் அடித்தார்.
தங்களின் அணுசக்தி நிலையங்கள் தாக்கப்பட்டதை இரான் தரப்பும் ஒத்துக்கொண்டது. என்றாலும், தங்களின் யுரேனியம் செறிவூட்டல் திட்டத்துக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இரானின் இந்தப் பிரகடனம் உண்மைதானா? மிக விரைவில் மீண்டு விடுவோம் என்ற இரானின் தன்னம்பிக்கைக்குப் பின்னால் இருக்கும் சூட்சமம் என்னென்ன?















Add Comment