Home » ஒரு பைட் அக்கறை
மெட்ரோ கதைகள்

ஒரு பைட் அக்கறை

மெட்ரோ கழுகுக் கண்களால் சூழப்பட்டு இருக்கும். நிலையத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு பெட்டிக்கு உள்ளேயும் சிசிடிவி கேமரா உண்டு. அதன் கட்டுப்பாடு ஓட்டுநரிடம் இருக்கும். மகளிர்ப் பெட்டிக்குள் ஆண்கள் நுழைந்தாலோ, உணவு உண்டாலோ உடனடியாக எச்சரிக்கை அறிவிப்பை ஒலிக்கவிடுவார். பதிவு செய்யப்பட்ட குரல்களைத் தாண்டி சில சமயம், ‘லேடீஸ் கோச்ல நிக்கற ஜென்ட்ஸ், அடுத்த கோச்சுக்கு மூவ் பண்ணிக்கோங்க’ என அவரே ஒலிபெருக்கியில் பேசுவார்.

நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்கிற உணர்வு எப்போதும் இருக்கும். மெட்ரோவில் மக்கள் விதிமுறைகளைப் பின்பற்றுவதற்கு அதுவே முக்கியக் காரணம்.

அன்று காலையும் வழக்கம்போல எல்லோரும் அமைதியாக நின்று கொண்டிருந்தனர். அலுவலகத்துக்கும், கல்லூரிக்கும், வகுப்புகளுக்கும் செல்பவர்களால் மெட்ரோ பெட்டி நிறைந்திருந்தது. அண்ணா நகர் நிறுத்தத்துக்குப் பிறகு இறங்குபவர்கள் குறைவு. அதனால் இருக்கைக்கு எதிரில் நிற்பதில் பயனேதும் இருக்காது. நான்கு இதழ் தூணைச் சுற்றிலும் கூட்டமாக இருக்கும். கதவுக்குப் பக்கத்திலேயே நின்றால் பெட்டிச் சுவர்களில் வசதியாகச் சாய்ந்து கொண்டு வரலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!