தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக மத்தியக் கல்வி அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு வரை வருடந்தோறும் அதிகரித்து வந்த இந்த எண்ணிக்கை, கடந்த மூன்றாண்டுகளில் சுமார் ஏழு லட்சம் அளவுக்குச் சரிந்திருப்பதாக அந்தப் புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்குக் கல்வி வழங்குவதில் தேசிய அளவில் கேரளாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது தமிழ்நாடு. சுமார் 80 சதவீதத்துக்கு மேற்பட்டோர் கல்வியறிவு பெற்ற மாநிலமாகவும் திகழ்கிறது. நாட்டின் மிகச் சிறந்த கல்விநிலையங்கள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளதால் உள்நாட்டிலிருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கு வந்து கல்வி கற்கின்றனர்.
இந்த நிலையில், அடிப்படைக் கல்வி பயிலக்கூடிய பள்ளிக்கூடங்களில் சேரக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் செய்தி கவலையளிக்கிறது. இந்தச் சிக்கலைக் குறிப்பிட்டுப் பல அரசியல் கட்சித் தலைவர்களும், கல்வி-சமூக நல ஆர்வலர்களும் அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
















ஒரு காலத்தில் நாட்டில் தனியார் ஆங்கிலவழியில் கற்பிக்கும் பள்ளிகளே
கிடையாது. குடும்பங்களில் பிள்ளைகளின் எண்ணிக்கையும் அதிகம்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளிலேயே பிள்ளைகளை சேர்க்க வேண்டிய கட்டாயம் இருந்தது. காலம் மாறியபோது ஆங்கில வழியில்
கற்பிக்கும் தனியார் பள்ளிகள் முளைத்தன. குடும்பக்கட்டுப்பாடு
திட்டம் தொடங்கியது. பிள்ளைகள் பிறப்பு விகிதம் குறைந்தது – குறைக்கப்பட்டது . இரண்டு அல்லது ஒரே பிள்ளை என்ற நிலை வந்தது.
குடும்பத்தை நடத்துவதற்கே சிரமப்படுபவர்கள் கூட தன் பிள்ளை (கள்)
ஆங்கிலவழி கல்வி கற்பதை பெமையாக நினைக்கத்தொடங்கினர்.
தொடக்கக் கல்வியில் ஆங்கிலவழி கல்வி அரசு பள்ளிகளில் இல்லாத
சூழ்நிலையில் தனியார் பள்ளிகளையே மக்கள் நாடினர் அது அடுத்த
நிலைக்கும் தொடர்ந்தது. தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அரசு முதலில் பள்ளிக்கூடக் கட்டிடங்களில் கவனம் செலுத்தி கழிப்பிடம் மற்றும் குடிநீர் பிள்ளைகள் அமர்ந்து படிப்பதற்கான வசதியில் கவனம்
செலுத்தி தரமான கல்வி அதை கற்பிக்க திறமையான ஆசிரியர்களை
பணியமர்த்துவது அல்லது அவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியளித்தல் ஆகியவற்றில் மேலும் கவனம் செலுத்த வேண்டும்.
பாபநாசம் நடராஜன்