தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம் 1998இன் பிரிவு 82(1)இன் கீழ் (திருத்தப்பட்ட சட்டம் மற்றும் 2022இன்படி) சொத்துகளுக்கான வரி வசூலிக்கப்படுகிறது. நகராட்சி எல்லைக்குள் இருக்கக்கூடிய நிலங்கள், கட்டடங்கள், தொலைத்தொடர்பு கோபுரங்கள், நிலத்தின் மீது கட்டப்பட்ட அல்லது நிலத்துடன் இணைக்கப்பட்ட கட்டமைப்புகள் ஆகிய அனைத்துக்கும் சொத்து வரி விதிக்கப்படுகிறது. இந்தச் சொத்து வரியில் பொது வரியோடு கல்வி வரியும் நூலக வரியும் இணைந்தே கணக்கிடப்படுகிறது.
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள எந்தவொரு சொத்துக்கும் ஆண்டு வாடகை மதிப்பையும் அரையாண்டு சொத்து வரி மதிப்பையும் நிர்ணயிப்பதற்கு நியாயமான வாடகை மதிப்பு என்ற முறை பின்பற்றப்படுகிறது. ஒரு கட்டடத்தின் பரப்பளவு, அதனுடைய பயன்பாடு, அந்தக் கட்டடம் அமைந்திருக்கும் தெருவுக்கான அடிப்படை விகிதம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வாடகை மதிப்பு கணக்கிடப்படுகிறது. சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வீடோ, வீட்டு மனையோ, வணிகச் சொத்தோ வைத்திருப்பவர்கள் சொத்து வரி கட்டுவோர் பட்டியலில் இடம் பெற்றிருக்கின்றனர்.
















Add Comment