இந்தியாவைச் சேர்ந்த இரண்டு வீரர்களுக்கு, ஐநா அமைதி காக்கும் படையின் உயரிய விருது வழங்கப்பட்டிருக்கிறது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு 1945 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் முதன்மையான நோக்கம் சர்வதேச அளவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வது. ஐக்கிய நாடுகளின் அமைதி பாதுகாப்புப் படை, சாவலான சூழல் நிலவும் நாடுகளுக்கு உதவுவதற்காகத் தோற்றுவிக்கப்பட்டது.
இவர்களது நோக்கம் மோதல், அரசியல் குழப்பம், யுத்தம் நடந்து கொண்டிருக்கும் தேசங்களில் தங்களால் இயன்ற நல் மாற்றங்களைக் கொண்டு வந்து, அங்கே இயல்பு நிலை திரும்புவதற்கு உதவி செய்வது.
போர் நிறுத்தங்களின் போது அமைதி ஒப்பந்தங்கள் மீறப்படாமல் இவர்கள் கண்காணிப்பார்கள். பொது மக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, எதிரெதிர் படைகளிடையே பாதுகாப்புக்காகத் தடுப்பு மண்டலங்களை உருவாக்குவது இவர்களது முதன்மைப் பணி. முன்னாள் வீரர்களுக்கு அவர்கள் தினசரி வாழ்க்கைக்குத் திரும்புவதற்கு உதவி செய்வது, தேர்தல்களைத் திட்டமிட்டு, சுதந்திரமாகவும், நியாயமான முறையிலும் நடத்திக் கொடுப்பது, இருதரப்பினிடையே சமாதானப் பேச்சுகளை, அரசியல் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பது போன்ற பணிகளையும் மேற்கொள்வார்கள்.















Add Comment