சுற்றுச்சூழலுக்கு உகந்த எரிபொருள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் 2026 ஏப்ரல் 1 முதல் 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் (E20) விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மறுபக்கம், நாடு முழுவதும் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகை, கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடும்போது சுமார் முப்பத்திரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு கடந்த மார்ச் 28 அன்று தெரிவித்துள்ளது. இப்பிரச்சனைக்குத் தீர்வாக, நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதிக அளவிலான கரும்பை எத்தனால் தயாரிப்புக்குப் பயன்படுத்த அரசுத் தரப்பு வழிகாட்டுகிறது.
இது எந்த அளவு சாத்தியம்? இம்முறையில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன? மற்ற நாடுகளில் எரிபொருள் கொள்கை எப்படிக் கையாளப்படுகிறது? பயோ எத்தனால் தயாரிப்பால் இந்திய விவசாயத்தில் என்னென்ன தாக்கங்கள் ஏற்படக்கூடும்? ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.















Add Comment