சைவம் உண்பவர்களைப் பார்த்து அசைவ உணவுப் பிரியர்களைப் பொறாமைப்பட வைக்கும் ஒரே உணவு பன்னீர் பட்டர் மசாலா. ஆனால் இது உண்டான வரலாறு தலைகீழானது.
முதலில் உருவானது பட்டர் சிக்கன் மசாலா. மீதமான தந்தூரி சிக்கன் துண்டுகள் வறண்டு போவதால் அவற்றை அப்படியே விற்க முடியவில்லை. அதனால் கொஞ்சம் மசாலாவோடு அதைத் தக்காளிக் குழம்பில் சேர்த்து, வெண்ணெய் ஊற்றி ஒப்பேற்றிய போது உருவானது பட்டர் சிக்கன் மசாலா. தில்லியின் மோத்தி மஹால் உணவகத்தில் உருவாகிப் பிரபலமான இந்த ரெசிபிக்குச் சைவ இணையாக பன்னீர் சேர்த்து உருவானது பன்னீர் பட்டர் மசாலா. ஆனால் அசலை விட நகல் பிரபலமடைந்து புகழ் பெற்ற முரண் இதற்கும் பொருந்தும்.
இது எல்லோராலும் வீடுகளில் செய்யக் கூடியது என்பதற்கு உத்தரவாதம் உண்டு. ஆனால் இதை உருவாக்கிய பஞ்சாபியர்களின் சுவையை அடைந்துவிட முடியுமா என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது. ஏனெனில், இதன் சமைக்கும் முறையை எவ்வளவு கறாராகப் பின்பற்றினாலும், பன்னீர் பட்டர் மசாலாவின் சுவை அவரவர் கைப்பக்குவத்தையே சார்ந்தது.
















Add Comment