2. வெள்ளைப் பொய்கள்
வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்ல மாட்டானா என்ற கேள்விக்கு நமக்குப் பதில் தெரியாது. ஆனால், வெள்ளைப் பொய்கள் பொய்யில் சேராதவை என்று துணிந்து கூறலாம். அது என்ன வெள்ளைப் பொய்?
தருமனாகவே இருந்தாலும் ஒரு பொய் அவனது மிதக்கும் தேரை இழுத்து மண்ணில் தள்ளும். உண்மையைச் சொன்ன மரவெட்டிக்குத் தங்கக்கோடரியும் வெள்ளிக்கோடரியும் தந்தது தேவதை. இப்படியான கதைகளைக் கேட்டு வளர்ந்தவர்கள் நாம். பொய் சொல்வது தவறு என்றுதான் குழந்தையிலிருந்தே நமக்குச் சொல்லப்பட்டுவருகிறது. ஆனால் மக்களால் விரும்பப்படும் பொய்களும் உண்டு. அவைதான் வெள்ளைப் பொய்கள்.
கறாராக உண்மை பேசுகிறவர்களை யாருக்கும் பிடிக்காது. அது நடைமுறை வாழ்க்கைக்கு ஒத்தும் வராது. சுடுகாட்டில் காவலுக்கு வைத்துவிடுவார்கள். நல்ல எண்ணத்தோடு சொல்லப்படும் பொய்கள் பொய்களே அல்ல, அவை மெய்களாகவே கருதப்படும் என்றார் வள்ளுவர். அவர் பிராக்டிகல் மேன். இப்படி மெய்களாகக் கருதத் தகுதிபெற்ற பொய்கள்தான் வெள்ளைப் பொய்கள்.
















Add Comment