எல்லாருமே ஒருநாள் இறக்கிறோம். அது தவிர்க்க முடியாதது. அப்படி இறக்கும்போது, நம் மரபைப் பேசும் சின்னமாக (Legacy) இந்த உலகத்துக்கு நாம் எதை விட்டுச் செல்கிறோம் என்று சிலர் மட்டுமே சிந்திக்கிறார்கள். அத்தகைய சிந்தனை அனைவருக்குமே இருக்கவேண்டும் என்கின்றன ஆய்வுகள். இந்தச் சிந்தனை மனநலத்தை மேம்படுத்துகிறது; நம் வாழ்க்கையின் அர்த்தத்தை நாம் கண்டுகொள்ள உதவுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பெரும்பாலான மக்கள் இதைப் பற்றிச் சிந்திப்பதில்லை என்கிறார் ஹண்டர். இவர் பௌலிங் கிரீன் மாநிலப் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியராக உள்ளார். புற்றுநோயிலிருந்து மீண்டவர்களின் மரபுச் சின்னங்கள் குறித்தும் ஆய்வுசெய்கிறார்.
ஒருவரது மரபு அல்லது மரபுச் சின்னம் பல வழிகளில் வெளிப்படுகிறது. தான் ஒரு மரபை விட்டுச் செல்கிறோம் என்பதுகூடச் சிலருக்குத் தெரியாது. ஆனால், நாம் எல்லோரும் ஏதோ ஒரு மரபை நமக்குப் பின் விட்டுச் செல்கிறோம் என்கிறார் ஹண்டர்.
















Add Comment