Home » 24 – இரண்டு
24 தொடர்கள்

24 – இரண்டு

24

நாடோடிப் பேரரசின் ஒழுங்கு

(செங்கிஸ் கான்)

கிபி பதின்மூன்றாம் நூற்றாண்டின் மங்கோலியப் பெருவெளி. குளிர்காலக் காற்று கத்தியைப் போல வீசிக் கொண்டிருந்தது. உலகின் மாபெரும் நிலப்பரப்பைக் கொண்ட பேரரசை உருவாக்கிக் கொண்டிருந்தார் செங்கிஸ் கான். ஒரு நாடோடி இனத்தைச் சேர்ந்தவர், உலக வரைபடத்தின் பெரும்பகுதியைத் தன் குதிரைக் குளம்புகளால் மாற்றி வரைந்தது எப்படி? இந்தக் கேள்விக்கு விடை அவரது போர்க்கள உத்திகளில் மட்டுமல்ல, துல்லியமான தினசரி ஒழுக்கத்தில்தான் இருந்தது.

மங்கோலியர்களின் ஒரு நாள் என்பது சூரியனின் திசை, காற்றின் வேகம் மற்றும் குதிரைகளின் பலத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது.

கம்பளித் தோலால் ஆன தற்காலிகக் கூடாரமான ‘கெர்’ தான் மங்கோலியர்களின் எளிய மாளிகை. செங்கிஸ் கானுக்கும் அதுவே அரண்மனை. அதிகாலை ஆதவன் உதிப்பதற்கு முன்பே கண் விழிப்பார். அவர் படுக்கையை விட்டு எழும்போது மங்கோலியப் புல்வெளிகளில் பனி இன்னும் உறைந்து கிடக்கும். அவர் பேரரசனாக மாறிய பின்பும் சாமானியப் போர்வீரனைப் போலவே தரையில் கம்பளி விரித்துத் தூங்குவதையே வழக்கமாகக் கொண்டிருந்தார். உடலை எப்போதும் போருக்குத் தயாராக வைத்திருக்கும் எளிய வாழ்க்கைமுறை அவரது அதிகாலைப் பொழுதின் தொடக்கமாக இருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!