55 ஓட்டம்
பயணத்தின் அடுத்த நிறுத்தமான பிவாண்டி வந்தும் பாம்பே பற்றிய நினைவுகள் எண்ணங்களைக் கிளறிக்கொண்டிருந்ததால் நிஜமாகவே அது இந்தியாவின் மிக முக்கியமான நகரம்தான் எனத் தோன்றியது.
பாம்பே மட்டுமில்லை இந்த சைக்கிள் ரேலியே நிறைய யோசிக்கவைக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். பயணத்தின் முக்கியத்துவமே புதிய புதிய விஷயங்களைப் பார்ப்பதில் இல்லை – புதிய விஷயங்கள் புதிய எண்ணங்களைக் கிளர்த்துகின்றன என்பதில்தான் இருக்கிறது எனத் தோன்றிற்று.
இருந்துகொண்டிருக்கும் கிணற்றைவிட்டு வெளியில் வந்தால்தான் உலகம் எவ்வளவு பெரியது, பரந்துபட்டது என்பதே தெரியவருகிறது. இதில் நாம் மட்டுமே இல்லை. இருக்கிற எத்தனை எத்தனையோவிதமான மனிதர்களைப் பார்க்க நாம் ஒன்றுமேயில்லை என்று புரியவைத்து, நம் தலையில் நம்மையே குட்டிக்கொள்ள வைக்கிறது.















Add Comment