Home » இலங்கை » Page 7

Tag - இலங்கை

உலகம்

குரங்கு பிசினஸ்

“ஷாங்காய் விமான நிலையம் நோக்கிப் பயணமாகும் UL866 விமானத்தில் டிக்கட் பதிவு செய்திருக்கும் பயணி Mr.Macaca-வுக்கான இறுதி அழைப்பு இது. தயவுசெய்து பன்னிரண்டாம் இலக்க நுழைவாயிலை நோக்கி விரையவும்” மனைவி, பிள்ளைகளின் கைகளை இறுகப் பற்றியிருந்த மிஸ்டர் மகாகா எனும் குரங்கு மாமா, பெருமிதத்தோடு...

Read More
சுற்றுலா

சிங்களத்தின் தாய்மொழி!

முன்பின் அறியாத கிராமம் அது. இதுவரை பரீட்சயமற்ற மொழியையும், கலாச்சாரத்தையும் கொண்ட மனிதர்களைப் பார்க்கப் போகிறேன். தேவைப்படுவதெல்லாம் அவர்களுள் ஒருவராக இணக்கமான பழக்கத்தை ஏற்படுத்திய பின்னர், அவர்களைப்பற்றி, அவர்கள் தொடர்பில் என்ன சொல்லத் தோன்றுகிறதோ அதை எழுத வேண்டும். ஆனால் அதற்கு முதலில்...

Read More
உலகம்

கடைசிவரை புரியாத கணக்குகள்

எல்லா நல்ல கருமங்களையும் பட்டாசு கொளுத்திக் கொண்டாடும் ஒரு கலாசாரம் சிங்கள மக்களிடமிருக்கிறது. கல்யாண உற்சவங்கள், கடைத் திறப்பு விழாக்கள் என்று இல்லை. கோட்டாபய ராஜபக்ச பதவியேற்ற போதும் கொளுத்தினார்கள். பதவி துறந்து ஓடிய போதும் கொளுத்தினார்கள். லேட்டஸ்டாக சர்வதேச நாணய நிதியம் (ஐ.எம்.எப, முந்நூற்று...

Read More
சுற்றுலா

மலைக்க ஒரு மலைப் பயணம்

மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே விரும்புகிறேன். இந்தப் பயணம்கூட அப்படித்தான். இரவு முழுவதும் நீண்டு கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது. பட்டாம்பூச்சிகள்...

Read More
சுற்றுலா

புத்தரின் எட்டு மாதக் காத்திருப்பு

மகியங்கனை பற்றி எழுத வேண்டும் என்று தீர்மானித்த போது எழுதுவதற்காக மீண்டும் அந்தத் தேசம் நோக்கிப் போக வேண்டும் என்று தோன்றியது. பல்கலைக்கழகக் காலத்தில் பல தடவைகள் மகியங்கனையை ஊடறுத்து பல காரணங்களுக்காகப் பயணம் செய்திருக்கிறோம். அந்தக் காலப்பகுதியில் மகியங்கனை விகாரை, சொரபொவ வெவவிற்குக்கூடச்...

Read More
சுற்றுலா

சீதைக் கோட்டை

இலங்கைத் தீவில் நீங்கள் எங்கு நடந்து சென்றாலும் அது இராவணன்- சீதாவோடு தொடர்பு கொண்ட இடமாக இருப்பது நிச்சயம் உங்களை வியப்பில் ஆழ்த்தும்.  நோக்கமின்றி, பாதையின்றி, என்னவென்று தெரியாத எதையோ நோக்கிப் பயணிக்கையிலும், இராவணப் பேரரசனும், சீதாதேவியும், இராமக் கடவுளும் எதிர்ப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ...

Read More
இலங்கை நிலவரம்

மாற்றிப் போட்ட ட்யூனும் மாறாத அவலங்களும்

கடைசியாக அது நடக்கப் போகிறது. பொருளாதார நெருக்கடிகளால் மூர்ச்சையாகி இருக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டாலர் நிதி ஆதாரத்தின் முதல் கட்டத் தவணையை வழங்க சர்வதேச நாணய நிதியம் (IMF) முன்வந்திருக்கிறது. அவ்வளவுதான். பலகட்டத் தடைகளைத் தாண்டி, சொந்த மகளின் கல்யாணக் கோலத்தை நடத்துவதைப் போன்ற பிரக்ஞையுடன்...

Read More
சமூகம்

ஈழ அகதிகளும் ஓட்டை வாளி உதவிகளும்

பொழுது நள்ளிரவைத் தாண்டி இருந்தது.  கடற்கரை ஓரத்தில் அச்சத்துடன் காத்திருந்தது அனிதாவின் குடும்பம். அவளுக்கு வயது அப்போது ஏழு. உடன், அண்ணனும் அக்காவும், தம்பியும், தங்கையும் இருந்தார்கள். அனிதாவின் அம்மாவுக்கு தம் பிள்ளைகளும் மற்ற பிள்ளைகளைப் போல இயக்கத்தில் சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம்...

Read More
காதல்

வளமான சிந்தனை, தெளிவான பெண்கள்!

இலங்கையின் இளம் தலைமுறை பாஸ்போர்ட் ஆபீஸ்களின் வாசல்களில் நிற்கிறது. அல்லது விமானநிலைய டிபார்ச்சர் வரிசையில் பாஸ்போர்ட்டை ஏந்திக் கொண்டு நிற்கிறது. நிச்சயமற்ற எதிர்காலம், புரியாத அரசியல் குழப்பங்கள், என்றைக்குமே தீராத இனமுரண்பாடுகளுடன் மல்லுக்கட்டி எப்படியோ பிழைக்க முயன்றால் புதிதாய் விதித்து...

Read More
சுற்றுலா

குகையில் அமர்ந்து எழுதிய நூல்கள்

விடுதலைக்கும் அமைதிக்குமான சமிக்ஞை எதுவாக இருக்கக்கூடும்..? விடுதலை உணர்வென்பது எடையற்ற பறக்கும் தன்மையானதாக நிச்சயம் இருக்க வேண்டும். அப்படி எடையற்றதாக்க எதையெல்லாம் வாழ்வில் எடுத்து வைக்கப்போகிறீர்கள் என்பதில் இருக்கிறது சுவாரஸ்யம். ஏனெனில் வாழ்விலிருந்து ஒன்றை அவ்வளவு இலகுவில் இறக்கிவைக்க...

Read More

இந்த இதழில்

error: Content is protected !!